தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' எப்போ ரிலீஸ் தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 01, 2019 10:10 PM
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். பிரபல நடிகர் சசிக்குமார் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து மறுவார்த்தை பேசாதே, விசிறி, நான் பிழைப்பேனோ போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இந்த பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் கௌதம் மேனன் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
அப்போது எனை நோக்கி பாயும் தோட்டாவின் ரிலீஸ் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், நவம்பர் 15 ஆம் தேதி கண்டிப்பா வரும் என்றார். அப்போது அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்தது.