தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ‘அசுரன்’ பட Censor ரிப்போர்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வட சென்னை'க்கு பிறகு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'அசுரன்'. வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படம் வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Dhanush and GV Prakash's Asuran Got UA certificate

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு இந்த படத்துக்கு செய்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ், கென், டிஜே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி இந்த படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.