சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’-க்கு நடுவே எண்ட்ரி கொடுக்கும் தனுஷின் ‘அசுரன்’!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 26, 2019 05:37 PM
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் ரிலீசாகும் போது தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’ திரைப்படத்தின் டிரைலர் திரையரடப்படும் என பிரபல திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனு இம்மானுவேல், அர்ச்சனா, ரமா, ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு, வேலராமமூர்த்தி, சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் நாளை (செப்.27) தேதி ரிலீசாகிறது. இந்த படத்தின் இடைவெளியின் போது, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என நெல்லையில் உள்ள ராம் முத்துராம் சினிமாஸ் திரையரங்கம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
'வட சென்னை' படத்துக்கு வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'அசுரன்' படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் தனுஷுடன் மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கென், டிஜே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.
#AsuranTrailer will be screened from tomorrow during the Interval of #NammaVeetuPilai !!
Enjoy
— Ram Muthuram Cinemas (@RamCinemas) September 26, 2019