லவ் மோடில் தனுஷ் - அசுரன் படத்தின் ‘ஏன் மினுக்கி’ பாடல் லிரிக் வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 26, 2019 03:21 PM
கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் அசுரன் திரைப்படத்தின் டீ .ஜே அருணாச்சலம், சின்மயி பாடிய “எம் மினுக்கி” பாடல் வெளியாகியுள்ளது.

'வட சென்னை' படத்துக்கு வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'அசுரன்'. இந்த படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷுடன் மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கென், டிஜே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தில் நடிகர் தனுஷ், அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்து வருகிறார். படத்தில் பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென், பவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லவ் மோடில் தனுஷ் - அசுரன் படத்தின் ‘ஏன் மினுக்கி’ பாடல் லிரிக் வீடியோ இதோ வீடியோ