விஜய்யுடன் போட்ட தெறி மாஸ் ஆல்பம்..! - கூடவே ஒரு குட் நியூஸ் சொல்லும் ஜி.வி.பிரகாஷ்
முகப்பு > சினிமா செய்திகள்இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யின் தெறி படத்தின் ஆல்பம் குறித்து தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தெறி. அட்லி இயக்கிய இத்திரைப்படத்தில், சமந்தா, எமி ஜாக்ஸன், மொட்ட ராஜேந்திரன், ராதிகா உள்ளிட்டோர் நடித்தனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்த இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தெறி படம் வெளியாகி 4 வருடங்கள் நிறைவடைவதையடுத்து, யூடியூபில் இப்படத்தின் ஆல்பம் 275 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் 50-வது படமான தெறி படத்தின் இந்த சாதனையை அவர் பகிர்ந்திருப்பது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Tags : Vijay, GV Prakash Kumar, Atlee, Theri