பிக்பாஸ் சாக்ஷியுடன் ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்து வரும் படம் 'ஆயிரம் ஜென்மங்கள்'. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக ஈஷா ரெபா, பிக்பாஸ் சாக்ஷி அகர்வால், நிகிஷா பட்டேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

GV Prakash and Bigg Boss Sakshi's Ayiram Jenmangal will release on Dec 20

மேலும், சதீஷ், ஆடுகளம் நரேன், வையாபுரி, மனோபாலா, கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தை தயாரிப்பாளர் ரமேஷ் பி.பிள்ளை தனது அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார்.

யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சி.சத்யா இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது