www.garudabazaar.com

தன்னை பத்தின Memes பாத்துட்டு அசிம் கொடுத்த ரியாக்ஷன்.. பிக் பாஸ கலாய்ச்ச அந்த மீம் இருக்கே 😂

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Azeem reaction after watching his memes bigg boss house

Also Read | ரச்சிதா பத்தி பேசும்போது விக்ரமன் சொன்னதை கேட்டுட்டு கலாய்த்த அமுதவாணன்..!

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இதனிடையே வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். தொடர்ந்து, ஆறாவது பிக் பாஸ் சீசனின் கடைசி நாமினேஷனும் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் அரங்கேறி இருந்தது.

Azeem reaction after watching his memes bigg boss house

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்ட சிலரும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி உள்ளிட்டோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர்.

Azeem reaction after watching his memes bigg boss house

இதனிடையே பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தந்திருந்த விஜே ஷோபனா, அசிமை தனியாக நேர்காணல் செய்திருந்தார். அப்போது அவரது கேம் குறித்தும் சக போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு கேள்விகளையும் ஷோபனா முன் வைத்திருந்தார். இதற்கு மத்தியில் அசிம் தொடர்பான சில மீம்ஸ்களும் அங்கே திரையில் காட்டப்பட, அதற்கு அசிம் கொடுத்த ரியாக்ஷன்கள் பெரிய அளவில் பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

Azeem reaction after watching his memes bigg boss house

Freeze டாஸ்க்கில் ஹவுஸ் மேட்ஸின் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் வந்த போது மிகவும் ஜாலியாக அசிம் இருப்பதும், அதே வேளையில் யாரும் இல்லாமல் இருக்கும் போது மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கோபத்துடன் இருப்பார் என்ற அசிம் ரியாக்ஷனும் என ஒரு மீம் இடம்பெற்றிருந்தது.

அதேபோல முந்தைய வார நாமினேஷன் டாஸ்க்கில் தங்களைப் பற்றி போட்டியாளர்கள் பேச வேண்டும் என்றும் அதில் சிறந்த முறையில் பேசும் நபருக்கு மட்டும் நாமினேஷனில் இருந்து விலக்கு வழங்கப்படும் என பிக் பாஸ் அறிவித்திருந்த நிலையில், இதில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அசிம் பேசி அதில் வெற்றி பெறவும் செய்திருந்தார். ஒரு மணி நேரம் இடைவிடாமல் பேசியதை கமல்ஹாசன் கூட குறிப்பிட்டு சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அசிம் ஒரு மணி நேரம் பேசிய புகைப்படம் இருக்க, அதன் கீழே, "செத்தீங்கடா. அவன் உங்ககிட்ட சிக்கலடா, நீங்க தான் அவன் கிட்ட சிக்கி இருக்கீங்க" என பிக் பாஸை ஜாலியாக கிண்டும் மீமும் இடம்பெற்றிருந்தது.

Azeem reaction after watching his memes bigg boss house

இந்த மீம் அனைத்தையும் சிரித்துக் கொண்டே கவனித்த அசிம், Thug Life பிக் பாஸ் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதே போல இந்த நேர்காணல் முடிந்து வெளியே வந்த அசிம், தனது சக போட்டியாளர்களிடம் தன்னைப் பற்றிய மீம் இருந்ததை விளக்கி சிரித்துக் கொண்டே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | விக்ரமனா? அசிமா?.. ஏடிகே சொன்ன நச் பதில்.. "`டைட்டில் ஜெயிக்கவும் இவருக்கு தான் தகுதி இருக்கு"

தொடர்புடைய இணைப்புகள்

Azeem reaction after watching his memes bigg boss house

People looking for online information on Azeem, Azeem memes, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil will find this news story useful.