www.garudabazaar.com

சன்னி லியோனுடன் நடிக்கும் ஜி.பி.முத்து புலம்பல்.. “அக்கா என்னலே நினைப்பாங்க? ஏலே இப்படி?”

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யுவன் இயக்கத்தில், ஜாவிட் இசையமைக்கும், புதிய பெயரிடப்படாத படம் ஒன்று தயாராகி வருகிறது.

GP Muthu starring in Sunny Leone movie reacting for memes

முதன்மை கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்கும் இந்த படத்தில் விஜய் டிவி  ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமான தர்ஷா குப்தா நடிக்கிறார். திகில் நிறைந்த இந்த காமெடி படத்தில் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் சன்னி லியோன் மற்றும் ஜி.பி.முத்து கலந்துகொண்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில் டிக்டாக் மூலம் பிரபலமானவர் யூடியூப் பிரபலம் ஜி.பி.முத்து. தனக்கு வரும் லெட்டரை படித்து தனக்கே உரிய எதார்த்தமான வட்டார வழக்கு மொழியாலும், அவர் கொடுக்கும் கமெண்டுகளாலும் ட்ரெண்ட் ஆனவர்.

இந்நிலையில் சன்னி லியோனுடன் ஜி.பி.முத்து நடிக்கும் இந்த படம் தொடர்பாக ஜி.பி.முத்துவை பயன்படுத்தி பலரும் மீம்ஸ்களை போட்டுத்தாக்கி வருகின்றனர். இதற்கு ரியாக்ட் செய்துள்ள ஜி.பி.முத்து, “சன்னி அக்கா இதையெல்லாம் பார்த்தா என்னலே நினைப்பாங்க?  ஏலே இப்படி பண்றீங்க?” என்கிற தொனியில் கேட்டுள்ளார்.

Also Read: “13 வருஷமாச்சு..”.. டிவி Interview-ல் அப்பா பற்றி பேசும்போது அழுதுவிட்ட ‘நயன்தாரா’.. என்ன ஆச்சு?

இதனிடையே ஷூட்டிங் ஸ்பாட்டில் சன்னி லியோன் தனக்கு காயங்கள் இருக்குமாறான காட்சிகளில் நடித்துவிட்டு அதே மேக்கப்-உடன் fork-ஐ பயன்படுத்தி தோசை சாப்பிடும் வீடியோவும் அவரது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

சன்னி லியோனுடன் நடிக்கும் ஜி.பி.முத்து புலம்பல்.. “அக்கா என்னலே நினைப்பாங்க? ஏலே இப்படி?” வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

GP Muthu starring in Sunny Leone movie reacting for memes

People looking for online information on GP MUTHU, Sunny Leone will find this news story useful.