www.garudabazaar.com

62 Years of Kamalism-த்தை முன்னிட்டு கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் கொல மாஸான அடுத்த அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 

kamals 62 years of kamalism vikram movie new poster

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது.

இந்நிலையில் கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து இந்த வருடத்துடன் 62 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு விக்ரம் படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை உற்சாகமூட்டியுள்ளார். போஸ்டரில் ONCE A LION. ALWAYS A LION என சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

kamals 62 years of kamalism vikram movie new poster

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj will find this news story useful.