www.garudabazaar.com

Nayanthara: “13 வருஷமாச்சு..”.. டிவி Interview-ல் அப்பா பற்றி பேசும்போது அழுதுவிட்ட ‘நயன்தாரா’.. என்ன ஆச்சு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நயன்தாரா தன்னுடைய அப்பா பற்றி பேசும்போது எமோஷனலாக அழுதபடி பேசியிருக்கும் ப்ரோமோ தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகியுள்ளது.

nayanthara emotional talk about her father in tv show viral

நடிகை நயன்தாரா தன்னுடைய தந்தை பற்றி உருக்கமாக பேசி இருக்கும் இந்த வீடியோ பிரபல நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா பங்கு பெறும்போது பேசப்பட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் முக்கியமான நடிகையாக மாறி இருக்கும் நயன்தாரா, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்கிற அடைமொழியினால் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

தற்போது ‘நயன்தாரா’ நடிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இதனையொட்டி நடிகை நயன்தாரா பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் திவ்ய தர்ஷினியுடன் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை பேசிய நயன்தாரா, விக்னேஷ் சிவனிடம் பிடித்தது பிடிக்காதது பற்றி எல்லாம் கூறுகிறார்.

அதேபோல் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக, நிச்சயதார்த்த மோதிரத்தை காண்பித்து பேசுகிறார். இந்தப் ப்ரோமோ ஏற்கனவே வெளியாகி வைரலாகி வந்த நிலையில், தற்போது நயன்தாரா தம்முடைய தந்தை பற்றி பேசி உருக்கமாக பேசும் ப்ரோமோவும் விஜய் டிவியில் வெளியாகியுள்ளது.

அதில் தன்னுடைய தந்தைக்கு 12, 13 வருடங்களாகவே உடல்நிலை சரியில்லை என்றும், தன்னிடம் இப்போது இருக்கும் குணநலன்கள் தன் தந்தையை பார்த்து வந்ததாகவும், மேலும் அவர் மருத்துவமனையில் இருப்பதாகவும் கண்கலங்கி கூறியுள்ளார் நயன்தாரா.

குறிப்பாக தன் தந்தையை, ஆரம்பத்தில் இருந்தது போலவே, உடல்நலனை சீர் செய்து இயல்பு நிலைக்கு திரும்ப கொண்டுவந்துவிட்டால் தனக்கு மிகவும் சந்தோஷம் என்று உருக்கமாக பேசியிருக்கிறார். தன் தந்தை பற்றி பேசும் போதே நயன்தாரா கண் கலங்க தொடங்கிவிட்டார். மற்றபடி தனது தந்தையை பற்றி அவர் பேசியதை எல்லாம் அழுது கொண்டே தான் பேசுகிறார். இந்த உருக்கமான ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

NAYANTHARA: “13 வருஷமாச்சு..”.. டிவி INTERVIEW-ல் அப்பா பற்றி பேசும்போது அழுதுவிட்ட ‘நயன்தாரா’.. என்ன ஆச்சு? வீடியோ

Tags : Nayanthara

nayanthara emotional talk about her father in tv show viral

People looking for online information on Nayanthara will find this news story useful.