www.garudabazaar.com

6 விதமான லுக்கில் அரவிந்த் சுவாமி... 4 நடிகைகள்.. தெறிக்கும் புதுப்பட ஸ்டில்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அரவிந்த் சுவாமி – செல்வா கூட்டணி இணைந்துள்ள ‘வணங்காமுடி’ படத்தின் டீசர் வெளியாகி 3 நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்திருக்கிறது.

Arvind Swami Vanangamudi get ups viral stills வணங்காமுடி

‘வானம்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்களை தயாரித்த கணேஷ் ரவிச்சந்திரன் தற்போது மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பாக ‘வணங்காமுடி’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

அரவிந்த் சுவாமி ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான இந்த டீசரில் அரவிந்த் சுவாமியா இது? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு அதே இளமையுடன் விதவித  கெட்டப்புகளில் கவனம் ஈர்க்கிறார். இந்தப் படத்தில் நாயகிகளாக ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன், சாந்தினி நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெயபிரகாஷ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தை ‘நான் அவன் இல்லை’ பார்ட் 1 & 2  ஹிட் படங்கள் கொடுத்த செல்வா இயக்கியுள்ளார். படம் குறித்து இயக்குநர் செல்வா பேசும்போது, “இது போலீஸ் கதை. வழக்கமான டமால்-டூமில் போலீஸ் கதையாக இல்லாமல் தன்னுடைய புத்திச்சாலித்தனத்தை கொண்டு ஹீரோ எப்படி குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறார் என்பதை நோக்கி கதை பயணிக்கும்.

அந்த வகையில் ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் வழக்குகள் எப்படி உள்ளே நுழைகிறது என்பதையும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அவர் எவ்விதங்களில் முயற்சி எடுக்கிறார் என்பதையும் விறுவிறு திரைக்கதையில் காட்சிப்படுத்தியுள்ளேன். அரவிந்த் சுவாமியின் படங்களில் இது  முக்கிய படமாக இருக்கும்” என்றார்.

இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.  கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் கவனிக்கிறார்.

Also Read: ரங்கன் வாத்தியார் & கபிலனுக்கு.. போட்டியாக டான்சிங் ரோஸ்.. வேம்புலி..  என்ன செஞ்சிருக்காங்க பாருங்க.. செம்ம Trending!

Arvind Swami Vanangamudi get ups viral stills வணங்காமுடி

People looking for online information on Arvind Swami, Vanangamudi will find this news story useful.