www.garudabazaar.com

"அன்று சன்னி லியோன்... இன்று நடிகை அனுபமா!!".. சர்ச்சைக்குள்ளான Exam ரிசல்ட்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீகார் மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் பிரபல மலையாள நடிகையின் புகைப்படம் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

After 'Sunny Leone', Bihar exam has anupama as candidate

பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதித் தேர்வு, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதற்கான முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக உருது, சமஸ்கிருதம் மற்றும் அறிவியல் ஆகிய 3 பாடங்களின் மதிப்பெண்கள் அப்போது வெளியிடப்படவில்லை, வெளியிடப்படாத ரிசல்ட்டுகள் இப்போது பீகார் அரசு இணையதளத்தில் வெளியிட்டது.

After 'Sunny Leone', Bihar exam has anupama as candidate

இதில்  மாணவர் ஒருவரின் மார்க் லிஸ்ட்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றிருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருவதோடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

After 'Sunny Leone', Bihar exam has anupama as candidate

இதேபோல கடந்த 2019 ஆம் ஆண்டு பீகார் பொது சுகாதார பொறியியல் துறையின் தகுதிப்பட்டியல் வெளியானது. அதில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் புகைப்படம்  இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

"அன்று சன்னி லியோன்... இன்று நடிகை அனுபமா!!".. சர்ச்சைக்குள்ளான EXAM ரிசல்ட்ஸ்! வீடியோ

மேலும் செய்திகள்

After 'Sunny Leone', Bihar exam has anupama as candidate

People looking for online information on Anupama Parameswaran, Sunny Leone will find this news story useful.