www.garudabazaar.com

"சன்னி லியோன், மியா கலிஃபா பேர்ல மெனுவா?".. எங்கயா இருக்கு இந்த ஹோட்டல்? Viral ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சில சமயம் நாட்டுக்குள் நடக்கும் எதார்த்தமான விஷயங்கள் கூட ட்ரெண்ட் ஆகிவிடுவது உண்டு.

restaurant dishesh named Mia Khalifa and Sunny Leone viral pic

காரணம் அதைச் செய்தவர்களே சற்றும் எதிர்பார்க்காமல் இது நிகழ்ந்துவிடுவது தான். அப்படித்தான், முன்னாள் அடல்ட் திரைப்பட நடிகைகளான சன்னி லியோன் மற்றும் மியா கலீஃபா ஆகியோரின் பெயர்களை தங்கள் மெனுவில் சேர்த்துள்ளது பிரபல உணவகம்.

ஆம், டெல்லியில் உள்ள பிரபல ரெஸ்டோரண்ட் ஒன்றின் மெனு பட்டியலில் தான், மியா கலீஃபா மற்றும் சன்னி லியோன் இடம் பெற்றுள்ளார்கள். இந்த ரெஸ்டாரண்டின் உணவுகளுக்கு இவர்களின் பெயரைக் கொண்டு பெயர் வைத்துள்ளனர் இந்த உணவக நிர்வாகிகள்.

அத்துடன் அந்த மெனுவை தங்களது கடையின் முகப்பில் எழுதி காட்சிப்படுத்த, இதனை பிரபல ஆன்லைன் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிறுவனமான Paytm-ன் நிறுவனர் புகைப்படமாக தமது ட்விட்டரில் பதிவிட, இந்த புகைப்படம் இப்போது VIRAL ஆகியுள்ளது.

Paytm நிறுவனர் விஜய் சேகர் இந்த உணவகத்தின் முகப்பு படத்தை தம் ட்விட்டரில் பகிர்ந்து,  “சீரியஸாகவே!” என குறிப்பிட்டுள்ளார். அந்த உணவகத்தின் மெனுவில் "சன்னி லியோன் சாப்" மற்றும் "மியா கலீஃபா சாப்" என்று உணவுகளுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயர்கள் உணகவகத்தின் பெயர் பலகையின் மீது எழுதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த உணகவத்தின் இந்த செயல் ஒருபுறம் ட்ரெண்ட் ஆகவும் செய்துள்ளது. இன்னொருபுறம் சர்ச்சைக்கு உள்ளாகியும் உள்ளது.

ALSO READ: "நயன்தாராவும் நீங்களும் இருக்கும் சீக்ரெட் ஃபோட்டோ?!".. ரசிகருக்காக இன்ஸ்டாவில் பகிர்ந்த விக்னேஷ் சிவன்!

தொடர்புடைய இணைப்புகள்

restaurant dishesh named Mia Khalifa and Sunny Leone viral pic

People looking for online information on Breaking, Internet, Mia Khalifa, Paytm, Pic, Sunny Leone, Trending, Viral will find this news story useful.