Asal Kolar : “Vibe செட் ஆகுறவங்க கூடதான் நிவாஷினி பேசுவாங்க”.. சக போட்டியாளர்கள் குறித்து பேசிய அசல்.!
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார். இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அசல் கோலார், முதல்முறையாக விஜய் டிவிக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில், “பிக்பாஸ் வீட்டுக்குள் எனக்கு பிடித்தமான ஃபேவரைட் போட்டியாளர்கள் மணிகண்டன், அசீம், தனலட்சுமி, நிவாஷினி. எனினும் ஒரு போட்டியாளரை பிடித்தவர், பிடிக்காதவர் என்று சொல்லமுடியாது. ஒவ்வொருவரும் அவரவர் கேரக்டரில் இருக்கிறார்கள். அவர்களில் எனக்கு பிடித்தவர்கள் என்று ஒருவரைச் சொல்ல முடியாது. சில பேரை, ஒரு சில நேரங்களில் அவர்கள் செய்யும் விஷயங்களால் பிடிக்காமல் இருந்திருக்கும். ஆனால் அதை வைத்து முழுமையாக ஒருவரை பிடிக்கும் பிடிக்காது என்று சொல்ல முடியவில்லை.
தனலட்சுமி அவருடைய கருத்தை நேரடியாக சொல்லி அடிப்பார். நிவாஷினி இன்னும் கொஞ்சம் எல்லாரிடமும் பேசி பழகி இருக்க வேண்டும். அவர் எப்படி என்றால் எப்போதுமே தன்னுடைய வைப் யாருடன் மேட்ச் ஆகுதோ அவர்களுடன் மட்டுமே நன்றாக பேசுவார். நானும் கூட அந்த மாதிரிதான்.. ஆனால் நிவாஷினி எல்லாரிடமும் பேசி கொண்டிருந்தால் நல்லது. குயின்ஸி தன்னுடைய கேரக்டரையும் கெடாமல் மற்றவர்களையும் சரியாக ஹேண்டில் பண்ண தெரிந்தவர். அதில் அவர் கைதேர்ந்தவர். கதிர் அனைவருடனும் இனிமையாக பழகுகிறார். மற்றவர்களின் மனம், புண்படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அது அவருடைய கேரக்டர் என்று தெரியவில்லை.
ஜனனி ஸ்மார்ட், புத்திசாலி அவர் வேலையே பேசுவதுதான். அவர் குறித்து எனக்கு முதலில் தெரியாது, வெளியே வந்த பின்னர்தான் அவர் பற்றி அறிந்து கொண்டேன். அவரது ஊரில் அந்த (செய்தி ஊடக) வேலை செய்து கொண்டிருந்தார், அதனால்தான் அவர் இப்படி இருக்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் நன்றாக ஆடிக்கொண்டிருக்கிறார். ஆயிஷா உண்மையில் எமோஷனுக்கு நிறைய இடம் கொடுக்கிறாரா அல்லது வேண்டுமென்றே செய்கிறாரா என்பது குறித்து தோன்றியது. பலருக்கும் அப்படித் தோன்றியிருக்கலாம். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அவர் சரியாகவே பேசுகிறார். ஆனால் எமோஷனலாக இருப்பதாக எனக்குப் படுகிறது.
சிவின் கணேசன் சிவனேசன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், எல்லாத்தையும் ஆய்வு பேச பேசக் கூடிய ஒருவர். ஆரம்பத்தில் அவர் தனிமையில் இருந்தார். அவருடன் பெரிதாக கனெக்ட் செய்து கொள்ள முடியவில்லை. ஆனால் எல்லாருடனும் ஒரே மாதிரி இல்லாமல், தனக்கு பிடித்தவர்கள் தன்னிடம் அதிகம் பேசுவீர்கள் என பார்த்து பார்த்து பேசுவதாக படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.