www.garudabazaar.com

முத்தையா இயக்க ஆர்யா நடிக்கும் புதிய படம்.. டைட்டில் இதுவா? வேறமாரி 🤩

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்த தகவல் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Arya 34 Muthiah project titled as Khader Sources

Also Read | கடற்கரையில் விளையாடும் நடிகை அசினின் மகள்.. அவரே பகிர்ந்த வைரல் ஃபோட்டோஸ்!

சசிகுமார் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த குட்டிப்புலி திரைப்படம் மூலம், இயக்குனராக அறிமுகம் ஆனவர் முத்தையா. இதன் பிறகு, கார்த்தியை வைத்து 'கொம்பன்' திரைப்படத்தை இயக்கி இருந்த முத்தையா, தொடர்ந்து விஷாலை வைத்து 'மருது' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

சமீபத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கார்த்தி - முத்தையா கூட்டணியில் வெளியான விருமன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. விருமன் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் முத்தையா அடுத்து நடிகர் ஆர்யாவுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

Arya 34 Muthiah project titled as Khader Sources

இந்த படத்தில் சிதி இத்னானி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த வெந்து தணிந்தது காடு படத்திலும் சிதி இத்னானி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முத்தையா இயக்கும் படங்கள் அனைத்திலும், கிராமம் சார்ந்த கதைக் களம் தான் இடம்பெற்றிருக்கும். 'அவன் இவன்' உள்ளிட்ட ஒருசில கிராமத்து பின்னணி கொண்ட படங்களில் நடித்திருக்கும் ஆர்யா, தற்போது முத்தையாவுடன் கைகோர்த்திருப்பதால் ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்திருக்கிறது.

Arya 34 Muthiah project titled as Khader Sources

மேலும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார்.

ஜி ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு 'காதர்' என தலைப்பிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | சர்தார் வெற்றி.. இயக்குனர் மித்ரனுக்கு பரிசளித்த விலையுயர்ந்த கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

Arya 34 Muthiah project titled as Khader Sources

People looking for online information on Aarya, ஆர்யா, காதர், முத்தையா, Khader, Muthiah will find this news story useful.