www.garudabazaar.com

"லட்ச லட்சமா சம்பாதிச்ச மனுசன.. இப்படி பாத்திரம் கழுவ".. G.P முத்துவை கலாய்த்த அமுதவாணன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் G P முத்துவை அமுதவாணன்  கலாய்த்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.

BiggBoss season 6 Tamil gp Muthu trolled by amuthavannan

Also Read | சசிகலா உறவினர் தியேட்டரில் 'பொன்னியின் செல்வன்' படம் பார்த்த ஆளுநர்! வைரலாகும் PHOTOS

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

BiggBoss season 6 Tamil gp Muthu trolled by amuthavannan

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

BiggBoss season 6 Tamil gp Muthu trolled by amuthavannan

போட்டியாளர்கள் பல்வேறு குழுவினராக பிரிந்து தற்போது செயல்படுகின்றனர்.

இந்நிலையில் ஜி.பி. முத்துவை அமுதவாணன் கலாய்த்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது.  "ஒரு பனைமரத்துக்கு கீழ உக்காந்து. ஒரு பழைய பேப்பரை படிப்பாரு. அதுக்கு லட்சம் லட்சமாக காசு கொட்டும். அவரை போய் இங்கே வந்து சோறாக்கு. கொழம்பு வை. பாத்திரம் வெளக்குனு சொல்றீங்களே" என அமுதவாணன் கலாய்த்த வீடியோ காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

BiggBoss season 6 Tamil gp Muthu trolled by amuthavannan

இதற்கு ஜி.பி. முத்து கொடுக்கும் "ரியாக்ஷன் தான் செம'' என ரசிகர்கள் வீடியோவை பகிர்ந்து கருத்து கூறி வருகின்றனர்.

 

Also Read | Biggboss 6 Tamil : தனலட்சுமி கூட பஞ்சாயத்து.. கண்ணீர் விட்டு கதறி அழுத ஜிபி முத்து.. எப்டி இருந்த மனுஷன்!!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss season 6 Tamil gp Muthu trolled by amuthavannan

People looking for online information on Amuthavanan, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, GP MUTHU, Vijay tv will find this news story useful.