www.garudabazaar.com

Biggboss 6 Tamil : "Bathroom'ல இதான் ஸ்பெஷலா?".. வெள்ளந்தியா கேட்ட GP முத்து.. அட்ராசிட்டி செஞ்ச அமுதவாணன்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு தினமும் ஏராளமான சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களாக சென்று கொண்டிருக்கிறது.

gp muthu about special in bathroom amudhavanan fun reply

விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால், இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது.

மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனால் தொடர்ந்து பிக்பாஸ் குறித்த விஷயங்கள், இணையத்தில் எப்போதுமே ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் கலகலப்பாக ஆரம்பித்த பிக்பாஸ் 6 ஆவது சீசன், அடுத்தடுத்து டாஸ்க்குகள் மற்றும் அணியாக பிரிந்த பிறகு, ஏகப்பட்ட பிரச்சனைகள் மற்றும் விவாதங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி வருகிறது.

இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொள்கிறது. உள்ளே எந்த அளவுக்கு பிரச்சனைகள் இருந்தாலும் தொடர்ந்து ஜிபி முத்து செய்து வரும் விஷயங்கள், பலரது ஆதரவினையும் பெற்றுக் கொண்டே தான் இருக்கிறது.

gp muthu about special in bathroom amudhavanan fun reply

முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜிபி முத்து, கமலிடம் பயத்தில் பேசியது தொடங்கி அடுத்தடுத்து அவர் செய்தது எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி இருந்தது. இவருக்கும் ஆர்மியை தொடங்கி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தும் வந்தனர். வெள்ளந்தியாக பேசிக் கொண்டு அனைவரிடமும் மிகவும் நட்பாக பழகி வந்தார் ஜிபி முத்து.

இதனிடையே, சமீபத்தில் தனலட்சுமிக்கும் ஜிபி முத்துவிற்கும் வாக்குவாதம் உருவாகி இருந்தது. அந்த சமயத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள் என ஜிபி முத்துவை தனலட்சுமி குறிப்பிட, இதனை எண்ணி கண்ணீர் வடிக்கவும் செய்தார் ஜிபி முத்து. ஆனால், மீண்டும் தனது ஃபார்மிற்கே திரும்பி உள்ள ஜிபி முத்து கலகலப்பாக பேசி வருகிறார்.

அந்த வகையில், பாத்ரூம் சுத்தம் செய்யும் அணியினரிடம் ஜிபி முத்து பேசிய விஷயங்கள், அதிகம் வைரலாகி வருகிறது.

gp muthu about special in bathroom amudhavanan fun reply

பிக்பாஸ் வீட்டில் உள்ள 20 போட்டியாளர்களும் 4 அணிகளாக பிரிக்கப்பட்டு பணிகளை செய்து வருகின்றனர். இதில், பாத்ரூம் சுத்தம் செய்யும் அணியில் ரச்சிதா இடம்பெற்றுள்ளார். அப்போது, அவர்களிடம் பேசிய ஜிபி முத்து, "பாத்ரூம்'ல இன்னைக்கி என்ன ஸ்பெஷல்?" என கேட்கிறார்.

இதற்கு பதிலளிக்கும் ரச்சிதா, "நிறைய ஸ்பெஷல் உள்ளது. அதை நாங்கள் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் வரும்போது அதனை உணர்வீர்கள்" என தெரிவிக்கிறார். உடனடியாக அருகில் இருக்கும் அமுதவாணன், "பாத்ரூமில் இன்று பொங்கல் ஸ்பெஷல்" என சொல்ல, "பாத்ரூம்'ல பொங்கலா?" என தனது பாணியில் கேட்கிறார் ஜிபி முத்து.

gp muthu about special in bathroom amudhavanan fun reply

முன்பு பாத்ரூம் அணியில் உள்ளவர்கள் சக போட்டியாளர்களை சிகப்பு கம்பளம் போட்டும், தூக்கி கொண்டும் போனதால் அது போல ஸ்பெஷல் உள்ளதா என்ற அர்த்தத்தில் ஜிபி முத்து கேட்க அதற்கு அமுதவாணன் சொன்ன பதில் அங்கே கலகலப்பை உண்டு பண்ணி உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

gp muthu about special in bathroom amudhavanan fun reply

People looking for online information on Amudhavanan, BB6 Tamil, BiggBoss6 Tamil, GP MUTHU will find this news story useful.