Bigg Boss 6 Tamil : "என் கடமையில தப்பு சொல்லுங்க.. நான் வெளிய போக தயார்.!" - ஆவேசமான ஜிபி முத்து.!
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் தனலட்சுமி தன்னை நடிப்பதாக சொன்னதாக சொல்லி விட்டதாக ஜிபி முத்து அழக்கூடிய ப்ரோமோ காட்சிகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் விரிவாக என்ன நடந்தது என்பதை எபிசோடில் விளக்கமாக காண முடியும். அதன்படி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அணிகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இதில் ஆயிஷா மற்றும் தனலட்சுமி இருவரும் ஒத்த கருத்துடன் ஒரு புகாரை முன்வைத்தனர். அப்போது ஆயிஷா, ஜிபி முத்து மீது ஒரு புகாரை முன்வைக்கிறார். அதாவது ஜிபி முத்து மற்ற அணிகளுக்கும் சேர்த்து வேலை செய்வதாக குறிப்பிடுகிறார். இதை ஜனனி டீல் செய்கிறார். இப்படி மற்ற அணிகளுக்கும் சேர்த்து வேலை செய்தால் ஜிபி முத்து வெளியே சென்று படுக்க வேண்டும் என்று ஜனனி குறிப்பிடுகிறார்.
அப்போது ஆவேசமாகும், ஜிபி முத்து, “ஏன்.. எதுக்கு? நான் என்னுடைய வேலைகளை பார்த்து முடித்த பின்புதான் மற்ற அணிகளுக்கு வேலை செய்கிறேன். என்னால் அப்படித்தான் இருக்க முடியும். என் வேலைகளை மட்டும் என்னால் செய்து கொண்டிருக்க முடியாது. என் வேலைகள் முடியாமல் அப்படியே கிடந்தால், அதாவது என்னுடைய கடமையை நான் செய்யாமல் இருந்தால் நீங்கள் கேட்கலாம். அப்படி நான் என் கடமையில் இருந்து தவறிட்டேன்னு சொல்லுங்க.. நான் வெளிய போக தயார்.. எங்க வேணாலும் போய் படுத்துக்கிறேன்” என ஜிபி முத்து ஆவேசமாக பெட்ரூமை விட்டு வெளியே படுக்க தயார் என பேசினார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- பேசிட்டு இருக்கும் போதே வெளியேறிய Azeem 😳 Maheshwari உடன் கடும் வாக்குவாதம்
- "என்ன எகிறிட்டு வரீங்க, உன் கால்ல விழட்டுமா"... GP MUTHU VS DHANALAKSHMI.. அனல் பறக்கும் வாக்குவாதம்
- "நீ திங்குற சோத்த தான், நானும் திங்குறேன்"... உச்சகட்ட கோவத்தில் GP Muthu கண்ணீர் 🥺 Bigg Boss
- "GP MUTHU- ண்ணே, ஜட்டி தெரியுது பாரு"🤣 வச்சு செய்யும் AMUDHAVANAN | வேற Level Fun | BIGG BOSS TAMIL
- "நல்ல பேர் வாங்கதான எல்லா Team-க்கு Help பண்றனு கேக்குறாங்க"...புலம்பும் GP MUTHU
- GP MUTHU-க்கு நிறைய FANS இருந்தா SUPPORT பண்ணனுமா... கொந்தளிக்கும் DHANALAKSHMI
- "நீங்க Elimination-க்கு போயிருக்கீங்க... அப்பிடினா என்ன?" வெகுளியாக கேட்ட GP MUTHU | AYESHA Issue
- "நான் நடிச்சத நீ பாத்தியா" 😡😡 DHANALAKSHMI மீது பயங்கர கோபத்தில் GP MUTHU
- "நாம Footage கேட்போம்"... GP MUTHU Vs DHANALAKSHMI மோதல்.. இந்த வாரம் குறும்படம் Confirm?
- அண்ணே, நீங்க ஒரு SUPER MAN, அதான் வெளியே அனுப்பிட்டீங்களே🤣 செம FUN பண்ண GP MUTHU & JANANY
- "அவங்க கூட சண்டை வரலாம்ன்னு யோசிச்சேன்"... AYESHA-வை வெளியே அனுப்பிய JANANY | BIGG BOSS 6 TAMIL
- என்ன எதுக்கு நடிக்குறேன்னு சொல்ற, நான் நடிக்கல 😥😢 கண்ணீர் விட்டு அழுத GP Muthu