சூர்யா ஜோதிகா - தியேட்டர் உரிமையாளர்கள் பிரச்சனை... களத்தில் இறங்குகிறது தமிழக அரசு..!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பொன்மகள் வந்தாள்'. இதனை அவரது கணவர் சூர்யா தனது 2D Productions சார்பாக தயாரித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் படம் OTT ஆன்லைன் தளங்கள் மூலம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் சிறு தயாரிப்பாளர்களுக்கும் லாபம் ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், தியேட்டர் உரிமையாளர்கள் இதனை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை வைத்தனர். மேலும் இனி எந்த சூர்யா ஜோதிகா தயாரிப்பு படங்களும் திரையரங்குகளில் வெளியாகாது என்றும் கூறினார். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செய்தியாளர்களை சந்தித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் இது பற்றி கேட்டபொழுது "பாதிக்கப்படுகின்றவர்கள், அதாவது தியேட்டர் உரிமையாளர்கள் அவர்கள் கருத்தினை கூறுகின்றனர். தயாரிப்பாளர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பையும் போனில் அழைத்து பேசினேன். இது இருதரப்பும் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினை என்பதால் அரசு அதற்கு உதவி செய்யும். இந்த விஷயத்தில் முதல்வரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.