சூர்யா - ஹரி கூட்டணியின் 'அருவா' - இந்த லேட்டஸ்ட் சென்சேஷன் நடிகைதான் ஹீரோயின்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா ஹரி கூட்டணியில் உருவாகவுள்ள அருவா படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. 

சூர்யாவின் அருவா படத்தின் ஹீரோயின் | actress raashi khanna to play as heroine in suriya hari's upcoming aruva

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் சூர்யா. இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இத்திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதையடுத்து சூர்யா, ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அருவா என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அருவா படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கி வரும் ராஷி கன்னா அருவா படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ராஷி கன்னா, தனது அடுத்த படம் குறித்து கேள்விக்கு, ''அரண்மனை-3 படம் மற்றும் சூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் படம், இவை இரண்டிலுமே தற்போது நடிப்பதாகவும், மேலும் இரண்டு தெலுங்கு படத்தின் அறிவிப்புகள் லாக் டவுனுக்கு பிறகு வெளியாகும்'' என தெரிவித்துள்ளார். 

 

Entertainment sub editor