Shocking : நடிகை ஜோதிகா குறிப்பிட்ட மருத்துவமனையில் பரபரப்பு... உச்சகட்ட அச்சத்தில் நோயாளிகள்..!
முகப்பு > சினிமா செய்திகள்சமீபத்தில் நடிகை ஜோதிகா ஒரு விருது வழங்கும் விழாவில் "கோவில்களுக்கு செலவு செய்வது போல் நாம் மருத்துவமனை, பள்ளிகளுக்கும் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். தஞ்சசையில் ஷூட்டிங் நடந்த போது ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையை குறித்து அவர் அவ்வாறு பேசினார். இதனையடுத்து சிலர் அவருக்கு விரோதமாக சர்ச்சை கேள்விகளை எழுப்பினர். இந்நிலையில் இதுபற்றி அவரது கணவரும் நடிகருமான சூர்யா ஆதரவாக ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார். அதற்கு நடிகர் விஜய் சேதுபதியும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

தற்போது ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. ஜோதிகா குறிப்பிட்ட அதே மருத்துவமனையில் பெண் ஊழியர் ஒருவரை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து ஆட்களை வைத்து சுத்தம் செய்த போது, கொடிய விஷம் உடைய 5 கட்டு விரியன் பாம்புகள் உட்பட 10 பாம்புகள் பிடிப்பட்டுள்ளன. பாம்பு கடித்த பெண் ஊழியருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.