கோவில் குறித்து ஜோதிகாவின் பேச்சு குறித்து வரலட்சுமி அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் நடிகை ஜோதிகா ஒரு விருது வழங்கும் விழாவில் "கோவில்களுக்கு செலவு செய்வது போல் நாம் மருத்துவமனை, பள்ளிகளுக்கும் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். தஞ்சாவூரில் உள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையை குறித்து அவர் அவ்வாறு பேசியிருந்தார்.

Actress Varalaxmi Supports Jyothika's speech about temple | கோவில் குறித்து ஜோதிகாவின் பேச்சுக்கு நடிகை வரலக்ஷ்மி கருத்து

இதனையடுத்து ஜோதிகாவின் பேச்சு மிகுந்த சர்ச்சையானது. அவரது கருத்துக்களுக்கு சிலர் ஆதரவாகவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட நடிகர் சூர்யா தங்களது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் தங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த வரலக்ஷ்மி பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசினார். அப்போது ஜோதிகா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒரு ஆக்டர் என்ன சொல்றாங்கனு புரியாம அத ட்விஸ்ட் பண்ணி வேற மாதிரி அத கொண்டு போறாங்க. அது ஏன்னு எனக்கு புரிய மாட்டிங்குது.

ஜோதிகா சொன்னது என்னவென்றால், ஒரு மதம் சார்ந்த இடத்தை நன்றாக பராமரிக்கும் போது, உயிர்காக்கின்ற மருத்துவமனையை நன்றாக பார்த்துக்கக்கூடாதுனு சொல்லியிருக்காங்க. அதுக்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.

கோவில் குறித்து ஜோதிகாவின் பேச்சு குறித்து வரலட்சுமி அதிரடி வீடியோ

Entertainment sub editor