சிவகார்த்திகேயன், கவினைத் தொடர்ந்து விஜய் டிவியில் இருந்து வரும் இன்னொரு ஹீரோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 21, 2019 02:47 PM
விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளரான கோபிநாத் மீண்டும் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். பாரதி கணேஷ் இயக்கவிருக்கும் “இது எல்லாத்துக்கும் மேல” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களில் கோபிநாத் ஆகவே நடித்திருக்கிறார். கோபிநாத் உடன் நடிகர் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அக்ஸிதா, ராகுல், ஷோபன், ஆதித்யா, மவுரியா ஆகியோர் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கின்றனர்
தமிழில் மிக முக்கியமான தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சித் தொடர். ஒரு கருத்தை எடுத்து அதை ஆதரிப்போரையும் அந்த கருத்தை எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரு தொலைக்காட்சி தொடரே நீயா நானா.
இந்த தொடரின் நடுவராக இருந்து கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக நடத்தி வரும் கோபிநாத் மக்களிடையே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது