www.garudabazaar.com

போதைக்கு NO சொல்லுங்க.. கையெழுத்திட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. முழு விபரம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று DYFI உறுப்பினர்களை சந்தித்திருக்கிறார்.

DYFI members met Superstar Rajinikanth Viral Tweet

                      Images are subject to © copyright to their respective owners.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். 'அண்ணாத்த' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், ஷிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  ஜெயிலர் படத்தின்  படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் நகரில் நடைபெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

ஜெயிலர் படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "லால் சலாம்" படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. லால் சலாம் படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதையற்ற தமிழ்நாடு என்னும் முழக்கத்தினை முன் வைத்து ஒரு கோடி கையெழுத்து இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தினர் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து போதையற்ற தமிழ்நாடு முழக்கத்திற்கு ஆதரவாக கையெழுத்து பெற்றிருக்கின்றனர். மேலும் இந்த சிறப்பான பணிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 

தொடர்புடைய இணைப்புகள்

DYFI members met Superstar Rajinikanth Viral Tweet

People looking for online information on DYFI, Rajinikanth, Superstar will find this news story useful.