"சைட் அடிக்குறாங்க".. "லவ் பண்றாளா?" ஷிவின் & கதிரவன் குறித்து அசிம் & ஜனனி சர்ச்சை கமெண்ட் bigg boss 6
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் இந்த வாரம் புதிய டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டது.

‘சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்’ என்கிற இந்த வார டாஸ்க்கின்படி, எது சொர்க்கம், எது நரகம், யார் நல்லவர், எவர் கெட்டவர், நரகத்தில் உள்ளவர்கள் சொர்க்கத்திற்கு போவதற்கான குறுக்கு வழி எது என கண்டுபிடித்து சென்றால்? அப்படி செல்ல ஒரு குறுக்கு வழி இருந்து, அதன் வழியே சொர்க்கத்தில் உள்ளவர்களை நரகத்திற்கு அனுப்ப முடிந்தால்?.. எப்படி இருக்கும் என்பதே இந்த டாஸ்க். இதிலும் வழக்கம்போல, சொர்க்கவாசிகள் வீட்டின் உள்ளேயும் நரகவாசிகள் கார்டன் ஏரியாவின் கூண்டிலும் அடைக்கப்படுவார்கள்.
ஆக, நரகவாசிகள் கொடுக்கப்படும் நேரத்திற்கு சைக்கிள் ஓட்டி உழைத்து களைத்து, சொர்க்கத்திற்கு நேர்வழியில் போகலாம். அது முடியாவிட்டால், அடைக்கப்பட்ட கூண்டில் இருந்து தப்பி, சொர்க்கத்துக்கான பாதை வழியே ஓடலாம். அதேசமயம் சிக்குனா சிதைச்சுருவாங்க.. தண்டனைகள் அவ்வளவு கடுமையாக இருக்கும் என்பதையும் அவர்கள் மனதிற்கொள்ளவேண்டும். இதில் கதிரவன் இருந்த கூண்டின் அருகிலேயே நின்று ஷிவின் கண்காணிக்க, அவரை பார்த்து, கதிரவனை சைட் அடிச்சிட்டு இருக்காங்க என்று அசிம் கமெண்ட் அடித்தது முதலில் சர்ச்சையானது.
இதனிடையே நரகவாசிகள் மொத்தமாக தப்பிக்க, அதை சொர்க்கவாசிகள் தடுக்க முயற்சிக்க, இந்தத் தள்ளுமுள்ளு காரணமாக ஏடிகே தோள்பட்டையில் அடிபட்டது. ஜனனியோ, அப்போது, “நீ அப்பவே கதிரவனைக் கட்டிப் போட்டிருக்கணும். அப்படி பண்ணிருந்தா மத்தவங்களுக்குப் பயம் வந்திருக்கும்ல” என்றார். ஆனால் ஷிவினோ, “நாம நரகவாசியா இருக்கும் போது சமர்த்தா இருந்தோம். இவங்க இப்படி ஓடுறாங்களே என்ன செய்ய?” என்று சொல்ல, இந்த கேமை இப்படித்தான் ஆடியாகணும் போல என அனைவருமே உணர்ந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆட்களை மாற்ற சொர்க்க வாசிகளிடையே நடந்த விவாதத்தில், ஜனனியும் ஏடிகேவும் வெளியில் செல்ல மறுத்தனர். இதற்குக் காரணமாக நரகவாசி கதிரவனைக் கட்டிப் போடாத லா பாய்ண்டை ஷிவின் மீது ஸட்ராங்காக முன்வைத்தார் ஜனனி. ஆனாலும் வாய்ப்பில்லை ராஜா என்பதுபோல், ஜனனயே வெளியே போக வேண்டி ஆனது. அத்துடன், கேரக்டர் பார்த்துத்தான் தங்களை ஏஞ்சலா தேர்ந்தெடுத்ததாக ஷிவின் கூறியது இன்னும் சர்ச்சையானது. இதனிடையே அதிருப்தியான ஜனனி, “நாமினேஷனில் நான் வருவேன் என்கிற நம்பிக்கை இருக்கு, அந்த கேரக்டர் எனக்கு இல்லை என கேமராவிடம் சொல்” என்று ஷிவினை குறிப்பிட்டு சொல்லிவிட்டு புறப்பட்டார்.
பின்னர் மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் அந்த டீமில் இருந்த அமுதவாணனை உள்ளே போக சொல்லி ஜனனி சொன்னது ஃபேவ்ரைட்டிஸமா என்கிற சர்ச்சையை கிளப்ப, இன்னொரு சாரர், அது அணியினர் மீதான அக்கறை என்கிற கருத்தும் எழுந்தது. ஆனால், யார் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்கிற முடிவை யார் எடுப்பது என்பதில் ஷிவினுக்கும் அசிமுக்கும் சண்டை வெடித்தது. அந்த களேபரத்தின் நடுவில்தான், ஜனனி, “இவ என்ன கதிரை லவ் பண்றாளா?” என்று கோப அடித்த கமெண்ட் சர்ச்சையாகியுள்ளது.