www.garudabazaar.com

அதிர்ச்சி!!! பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த போட்டியாளர்... Biggboss6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Janany Elimination announced in BiggBoss 6 Tamil

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, நிவாஷினி, ராபர்ட், குயின்சி மற்றும் ராம் ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த வாரம் புதிய டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்’ என்கிற இந்த வார டாஸ்க்கின்படி, எது சொர்க்கம், எது நரகம், யார் நல்லவர், எவர் கெட்டவர், நரகத்தில் உள்ளவர்கள் சொர்க்கத்திற்கு போவதற்கான குறுக்கு வழி எது என கண்டுபிடித்து சென்றால்? அப்படி செல்ல ஒரு குறுக்கு வழி இருந்து, அதன் வழியே சொர்க்கத்தில் உள்ளவர்களை நரகத்திற்கு அனுப்ப முடிந்தால்?.. எப்படி இருக்கும் என்பதே இந்த டாஸ்க். இதிலும் வழக்கம்போல, சொர்க்கவாசிகள் வீட்டின் உள்ளேயும் நரகவாசிகள் கார்டன் ஏரியாவின் கூண்டிலும் அடைக்கப்படுவார்கள். இது பரபரப்பாக சென்ற நிலையில் வழக்கம்போல நேற்று கமல்ஹாசன் தோன்றினார்.

கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து கமல் நேற்றும் இன்றும் பேசியிருந்தார். இதனிடையே எலிமினேஷன் யார் என்பதையும் அவர் அறிவித்தார். அதன்படி இந்த வார எலிமினேஷனாக ஜனனி தேர்வாகியுள்ளதாக அவர் கார்டு காண்பித்தார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதன்மூலம் ஜனனி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Janany Elimination announced in BiggBoss 6 Tamil

People looking for online information on BiggBoss6, Biggboss6Tamil, Janany will find this news story useful.