போடு வெடிய!!.. பிக்பாஸ் சீசன் 5-ல ‘இவங்களுக்கு’ Army ஆரம்பிக்க போறாங்களா? யார் இந்த அக்‌ஷரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் முதல் நாளே 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

fans to start army for BiggBossTamil5 Akshara Reddy

நடிப்பு, நாடகக்கலை, பாடல், மாடல் என பல்வேறு துறைகளிலும் இருந்து ஹவுஸ் மேட்ஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர். இவர்களில் ஒருவர்தான் அக்ஷரா ரெட்டி. பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியாவுக்கு ஆர்மி தொடங்கப்பட்டது.

fans to start army for BiggBossTamil5 Akshara Reddy

ஓவியா ஆர்மி என்று பிரபலமான இந்த ஆர்மி போக்கு அடுத்தடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் தொடர்ந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனுக்கு அக்ஷராவுக்கு ஆர்மி ஆரம்பிக்க போவதாக ரசிகர்கள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன.

fans to start army for BiggBossTamil5 Akshara Reddy

அக்ஷரா ஒரு மாடல். துபாயில் நடந்த குளோப் 2019 என்கிற அழகிப் போட்டியில் கலந்துகொண்டு வின்னராக வெற்றிபெற்ற அக்ஷரா, தொடர்ந்து ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களிலும் அழகிப் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றிருக்கிறார். இதேபோல் பல பேஷன் ஷோக்களில் நடுவராக இருந்திருக்கிறார்.

fans to start army for BiggBossTamil5 Akshara Reddy

மலேசிய தமிழ் படமான காசு மேல காசு என்ற திரைப் படத்தில் நடித்திருக்கும் அக்ஷரா பில்கேட்ஸ் என்ற திரைப்படத்திலும், டாடி என்கிற தெலுங்குப் படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் அக்ஷரா வந்திருக்கிறார்.

fans to start army for BiggBossTamil5 Akshara Reddy

குறிப்பாக ஜார்ஜியாவில் சைக்காலஜி படித்திருக்கும் அக்ஷரா, பிக்பாஸ் வீட்டுக்குள் ஒவ்வொருவரையும் எப்படி ஹேண்டில் செய்யப் போகிறார் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட முதல் நாள் முதல் ஷோவில் அக்ஷரா அறிமுகப் படுத்தப்பட்ட பின்னர் பேஷன் ஷோவில் நடந்து வருவது போல கமல்ஹாசன் அவரை நடந்து வரச்சொன்னார்.

fans to start army for BiggBossTamil5 Akshara Reddy

அதன் பின்னர் பேசிய கமல், “புதிய ஆடைகளின் வடிவமைப்பின் போது அதை அழகிகள் அணிந்து நடந்து வருவார்கள். அந்த ஆடைகளை எவ்வளவு நுணுக்கமாக எடுத்து வருகிறார்கள் என்பதுதான் அந்த கலை. அது கவனமான பொறுப்பு” என்று விளக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “அடக்கடவுளே!.. இந்த சின்ன வயசுல இந்த பொண்ணோட நெலம யாருக்கும் வரக்கூடாது”.. பிக்பாஸ் பாவனிக்காக கலங்கும் ரசிகர்கள்!

fans to start army for BiggBossTamil5 Akshara Reddy

People looking for online information on Akshara army BiggBossTamil5, Akshara Reddy, BiggBoss5, VijayTelevision will find this news story useful.