Reliable Software
www.garudabazaar.com

‘பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்கிறேனா?’.. மனம் திறந்த குக் வித் கோமாளி பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இதுவரை 4 சீசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில் பிக்பாஸ் 5வது சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஏங்கத் தொடங்கிவிட்டனர். நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4ல் நடிகர் ஆரி வெற்றிபெற்றிருந்தார்.

CookWithComali2 Kani opens up over BiggBoss5 பிக்பாஸ்

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் 5 வது சீசன் எப்போது வரும் என்று இப்போதிலிருந்தே ரசிகர்கள் பேசத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் இன்னொரு பக்கம் விஜய் டிவியில் தினமும் ட்ரெண்ட் ஆகி வரும் இன்னொரு நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் புகழ்,  சிவாங்கி, அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். இதில் பாபா பாஸ்கர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே பங்கேற்று பிரபலமானவர் தான். இதனிடையே இந்த பிக்பாஸ் 5 வது சீசனில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து பங்கேற்கப் போகும் பிரபலங்கள் பற்றிய பேச்சுகளும் எழுந்து வந்த நிலையில் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலக்கி வரும் கனி பிக்பாஸ் 5 வது சீசனில் பங்கேற்பார் என பேச்சளவில் கூறப்பட்டது.

ஆனால் இது பற்றி தெளிவு படுத்திய கனி, பிக்பாஸ் தரப்பில் இருந்து தனக்கு எந்த ஒரு அழைப்பும் இதுவரை வரவில்லை என்றும், ஒருவேளை பிக்பாஸ் 5 வது சீசனில் கலந்துகொள்வது உறுதியானால் நிச்சயம் உடனடியாக தகவல் தெரிவிப்பேன் என்று கூறியிருக்கிறார். இயக்குநர் அகத்தியனின் மகளும் இயக்குநர்  திருவின் மனைவியுமான கனிக்கு பிடித்தமானது காரக்குழம்புதான் என்று பாபா பாஸ்கர் கலாய்த்து வந்தாலும் கனி குக் வித் கோமாளியில் கலக்கி தான் வருகிறார். அண்மையில் இந்த நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட் ஆகியுள்ளார். 

விஜயலட்சுமி மற்றும் ரஞ்சினி ஆகியோரின் சகோதரிதான் கனி. இதில் விஜயலட்சுமி ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்திருந்த நிரஞ்சனி அகத்தியன் அண்மையில்தான் அந்த படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமியை மணந்தார்.

ALSO READ: “KGF மாதிரி Sulthan-லயும் இப்படி ஒரு விஷயம் இருக்கு”.. அப்போ தெறிக்க போகுது!  வில்லன் 'கருடா' ராம் Exclusive பேட்டி!

‘பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்கிறேனா?’.. மனம் திறந்த குக் வித் கோமாளி பிரபலம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

CookWithComali2 Kani opens up over BiggBoss5 பிக்பாஸ்

People looking for online information on BiggBossTamil4, CookWithComali, Kani, Trending, Vijay Television will find this news story useful.