"என் divorce எப்பவா?".. கொந்தளித்த ‘சமீபத்தில்’ திருமணம் ஆன நடிகை! என்ன நடந்தது?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வித்யுலேகா ராமன் சந்தானம் நடித்த பல திரைப்படங்களில் அவருடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளில் நடித்து இருக்கிறார்.

when is my divorce? actress vidyu raman angry reply to haters

அண்மையில் திடீரென உடலை குறைத்து புதிய தோற்றத்துடன் வலம் வரத்தொடங்கியிருக்கும் வித்யூலேகா ராமன் பிரபல நடிகர் மோகன் ராம் அவர்களின் மகள் ஆவார். இந்நிலையில் வித்யூலேகா ராமன் அண்மையில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை தொடர்ந்து இவருடைய கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்தார்.

when is my divorce? actress vidyu raman angry reply to haters

அப்போது நீச்சல் உடையில் சில புகைப்படங்களை அவர் தமது சமூக பக்கங்களில் பதிவிட்டு இருந்தார். இதற்கு சில நெட்டிசன்கள் மத்தியிலிருந்து நெகட்டிவ் கமெண்டுகள் வர தொடங்கின. இந்த நிலையில் இது தொடர்பாக கொந்தளித்து ஒரு போஸ்ட் பதிவிட்டிருக்கிறார் வித்யூ ராமன்.

when is my divorce? actress vidyu raman angry reply to haters

அந்த போஸ்டில், “நான் நீச்சல் உடையிலான புகைப்படத்தை பகிர்ந்ததற்கா இத்தனை நெகட்டிவ் கமெண்ட்டுகள்? அதிலும் சில மெசேஜ்களை பார்க்கவேண்டுமே? “உங்களுடைய விவாகரத்து எப்போ?”.. என்கிற அளவுவரை கேட்டிருக்கிறார்கள்.

1920-ஐ சேர்ந்த ஆன்ட்டிஸ் மற்றும் அங்கிள்கள் 2021-க்கு வாருங்கள். நெகட்டிவ் கமெண்டுகளில் இல்லை பிரச்சனை. நம்முடைய சமூக சிந்தனையில் தான் சிக்கல். ஒரு பெண் அணியும் உடையை வைத்து அவருடைய விவாகரத்தை தீர்மானிக்க முடியுமா? அப்படி என்றால் முழுமையாக இழுத்துப்போர்த்தி ஆடை அணிந்து இருக்கும் பெண்கள் எல்லாம் தங்களுடைய இல்வாழ்க்கையில் சந்தோஷமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா?” என்று கோபமாக கொந்தளித்து தன்னுடைய பதிவில் வித்யூ கேட்டிருக்கிறார்.

மேலும் தம்முடைய பதிவில், “நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. என்னை நன்றாக பார்த்துக் கொள்ளும் ஒரு கணவர் கிடைத்திருக்கிறார். அவர் இதுபோன்ற விஷயங்களை அணுக வேண்டாம்; புறக்கணித்து விட்டு போகவே சொன்னார்.

இருப்பினும் இதை அப்படியே தூக்கி போட்டுவிட்டு நகர முடியவில்லை. ஹேட்டர்ஸ்களின் டாக்ஸிக் மற்றும் குறுகிய மனப்பான்மையை திருத்த முடியாது!” என்றும் அவர் ஆவேசமாக குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read: “அடக்கடவுளே!.. இந்த சின்ன வயசுல இந்த பொண்ணோட நெலம யாருக்கும் வரக்கூடாது”.. பிக்பாஸ் பவானிக்காக கலங்கும் ரசிகர்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

when is my divorce? actress vidyu raman angry reply to haters

People looking for online information on விவாகரத்து, Divorce, Vidyu Raman will find this news story useful.