சமந்தா- நாகசைதன்யா பிரிவுக்கு இந்த நடிகர் தான் காரணம்! சர்ச்சையை கிளப்பிய கங்கனா ரனாவத்!
முகப்பு > சினிமா செய்திகள்சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒருவரையொருவர் காதலித்து 2017 இல் திருமணம் செய்தனர். அதன் பின்னர் இந்த ஜோடி ரசிகர்களிடம் பிரபலமான ஒன்றாக மாறியது.
ஆனால், கடந்த சனிக்கிழமை பிற்பகலில், இருவரும் பிரிந்ததாக அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை இதுகுறித்து தெரிவித்து வருகின்றனர். நடிகை கங்கனா ரணாவத் இந்த விஷயத்தில் வித்தியாசமான கருத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், எப்பொழுது விவாகரத்து நடந்தாலும் தவறு என்பது ஆண்களின் பக்கம் தான் உள்ளது. நான் சொல்வது பழமைவாதமாக தோன்றலாம். ஆனால் கடவுள் இப்படித்தான் ஆணையும், பெண்ணையும் படைத்துள்ளார். இயற்கையிலேயே ஆண் வேட்டையாடுபவனாகவும், பெண் வளர்ப்பவளாகவும் இருக்கிறார்கள். பெண்களை ஆடைபோல மாற்றி மாற்றி பின்னர் பிரிந்த பின் முன்னாள் மனைவியிடம் நண்பர்களாக இருக்கிறோம் என்று சமூகத்தில் பேசும் ஆண்களிடம் கனிவு காட்டாதீர்கள்.
100 பெண்களில் ஒரு பெண் தவறான நபராக இருக்கலாம். ஊடகம் மற்றும் ரசிகர்களிடம் இருந்து ஆதரவு பெறும் ஆண்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இது போன்ற ஆண்களை புகழ்ந்து பெண்களைப் பற்றி தீர்மானம் செய்கிறார்கள். விவாகரத்து கலாச்சாரம் முன்பைக் காட்டிலும் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியது, ஒரு தென்னிந்திய நடிகர் திடீர் என்று தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் தான் ஆகிறது. திருமணத்துக்கு முன் 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அந்த தென்னிந்திய நடிகர், சமீபத்தில் பாலிவுட்டில் உள்ள விவாகரத்து நிபுணரான பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் தொடர்பில் வந்திருக்கிறார். அந்த சூப்பர் ஸ்டார் பல பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்தவர்.
அந்த பாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர் தான் தற்போது அந்த தென்னிந்திய நடிகருக்கு வழிகாட்டியாக இருக்கிறார். நான் யாரை குறிப்பிட்டு சொல்கிறேன் என்பது அனைவருக்கும் எளிதில் நன்றாக தெரியும்" என்று நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார்.
நாக சைதன்யா - சாய்பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான லவ் ஸ்டோரி படத்தின் ரிலீஸ் நிகழ்விற்கு அமீர்கான் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அமீர்கான் நடிக்கும் Forrest Gump ஹாலிவுட் படத்தின் ரீமேக்கான லால் சிங் சதா படத்தில் அமீர்கானின் ராணுவ நண்பராக நாக சைதன்யா நடிக்கிறார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Is This 'star' The Reason Behind Sam-Chay Separation? Kangana Ranaut's Shocking Post Grabs Attention
- ACTRESS SAMANTHA CHANGING HER NAME AGAIN ON TWITTER
- From Samantha Changing Her Name Again To Her Emotional Post After Split With Naga Chaitanya - Here's What You Missed
- Samantha Naga Chaitanya Separation Reason Rumours
- Nagarjuna First Tweet Over Samantha Naga Chaitanya Separation
- Is This The Real Reason Behind Samantha-Naga Chaitanya’s Divorce? Nagarjuna Reacts To The Separation
- Fans In Complete Shock As Samantha Announces Divorce With Naga Chaitanya After 4 Years Of Marriage
- Actress Samantha Actor Naga Chaitanya Divorced
- Everyday Inspiration Samantha Cycling Ride Video
- Samantha First Ever Video Explanation Over Rumours
- VIDEO: Samantha Opens Up About 'rumours' For The First Time - Here's What She Said
- Amidst Divorce Talks With Naga Chaitanya, Samantha Says She Is Unbreakable; Spends Time With Friends; Viral Video
தொடர்புடைய இணைப்புகள்
- "எப்பவுமே உண்மை தான் வெல்லும்.." SAMANTHA'S LATEST POST GOES VIRAL
- ரூ.200 கோடியை ஏற்க மறுத்த சமந்தா?..பின்னணி என்ன ? | Samantha | Nagarjuna
- "அழுக்கை சுத்தப்படுத்தனும், பொய் சொல்லக்கூடாது" SAMANTHA AFTER DIVORCE POST
- நீங்களா ஒன்னு நினைச்சுக்கிட்டு உளறக்கூடாது... KUSHBOO ANGRY RESPONSE
- சமந்தா - சைதன்யா பிரிவு...'மனம் நொந்துபோன நாகார்ஜூனா'..உருக்கமான பதிவிட்டு வேதனை
- DIVORCE பண்ணுறது அவங்க Personal..SAMANTHA & CHAY எனக்கு ரொம்ப பிடிக்கும் - Nagarjuna Emotional
- ஜோடியாக பிரிந்த சமந்தா - நாக சைதன்யா..வேதனையுடன் பதிவிட்டு விளக்கம் | Samantha | Naga Chaitanya
- DIVORCE-க்கான உண்மை காரணம்...SAMANTHA-CHAY Officialy Seperated
- SAMANTHA: "நாங்க பிரியுறோம்"... NAGA CHAITANYA-உடன் விவாகரத்து | BREAKING NEWS
- NAYANTHARA-வின் BOUNCERS-உடன் முட்டி மோதி PHOTO எடுத்த 60 வயது ரசிகர் | TIRUPATI TEMPLE VISIT
- 'Cycle-லில் பறந்த Samantha' மாற்றுத்திறனாளிகளுடன் மழையில் நனைந்தபடி 21 Km Cute Ride..!
- நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி.. SAMANTHA CLARIFIED ABOUT RUMOURS