IRAVIN NIZHAL
www.garudabazaar.com

சிக்கித் தவிக்கும் பகத்.. பின்னணி இசையில் மிரட்டிய ஏ.ஆர். ரஹ்மான்.. வெளியானது Malayankunju 'டிரைலர்'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் பகத் ஃபாசில். ஒவ்வொரு படத்திலும் மிக மிக வித்தியாசமான கதைக்களம் மற்றும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்கும் பகத் ஃபாசில், கடந்த ஜூன் மாதம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்திலும் நடித்திருந்தார். 

fahadh faasil starrer malayankunju new trailer released

இதில், பகத் ஃபாசிலின் அசாத்திய நடிப்பு, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, பகத் ஃபாசில் மலையாளத்தில் நடித்துள்ள 'மலையன்குஞ்சு' திரைப்படம் வெளியாக உள்ளது.

ஜூலை மாதம் 22 ஆம் தேதி, மலையன்குஞ்சு திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை சஜிமோன் பிரபாகர் இயக்கி உள்ளார். மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன், மலையன்குஞ்சு படத்தின் திரைக்கதையை எழுதி, ஒளிப்பதிவும் செய்துள்ளார். பகத் ஃபாசிலின் தந்தை ஃபாசில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

30 வருடங்களுக்கு பின் ஏ.ஆர். ரஹ்மான்..

பகத் ஃபாசிலுடன், ரஜிஷா விஜயன், இந்திரன்ஸ், ஜாஃபர் இடுக்கி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் டிரைலர் பல மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இதன் பின்னர், கடந்த சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் முதல் சிங்கிளான "சோலப்பெண்ணே" என்ற பாடலும் வெளியாகி இருந்தது.

fahadh faasil starrer malayankunju new trailer released

கடந்த 1992 ஆம் ஆண்டு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த படம் 'யோதா'. மோகன்லால் நடிப்பில், மலையாளத்தில் வெளியாகி இருந்த இந்த திரைப்படத்திற்கு பின்னர், எந்த மலையாள படத்திற்கும் இசையமைக்காமல் இருந்து வந்தார் ஏ.ஆர். ரஹ்மான். இதனைத் தொடர்ந்து, சுமார் 30 ஆண்டுகளுக்கு பின், தற்போது 'மலையன்குஞ்சு' படத்தில் இருந்து ரஹ்மான் மலையாளத்தில் இசையமைத்த பாடல் வெளியாகி உள்ளது.

fahadh faasil starrer malayankunju new trailer released

மிரட்டும் மலையன்குஞ்சு 'டிரைலர்'

இந்நிலையில், மலையான்குஞ்சு திரைப்படத்தின் புதிய டிரைலர் ஒன்றையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதன் மூலம், மழை பெய்து ஏற்படும் நிலச்சரிவில், பகத் ஃபாசில் சிக்கிக் கொள்ளும் ஒரு சர்வைவல் திரில்லர் திரைப்படமாக மலையன்குஞ்சு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

fahadh faasil starrer malayankunju new trailer released

அதே போல, ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையும் டிரைலர் பார்ப்போரை மிரட்டும் வகையில் அமைந்துள்ளது. இதனால், படத்தின் ரீலீஸையும் மக்கள் எதிர்நோக்கி காத்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

fahadh faasil starrer malayankunju new trailer released

People looking for online information on AR Rahman, Fahadh Faasil, Mahesh Narayanan, Malayankunju, Malayankunju Trailer, Rajisha Vijayan will find this news story useful.