Yaanai

"ARR இசை.. பொன்னியின் செல்வன் RR பணியில் டிரம்ஸ் சிவமணி" - பின்னணியில் கார்த்தி Look.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் மணிரத்னம் 80-களின் இறுதியில் இருந்தே தமிழ் சினிமாவில் தனித்துவமான சினிமாக்களை வழங்கி வருபவர்.

Ponniyin selvan Karthi Look Drums Sivamani AR Rahman

Also Read | இந்தியாவுக்கு வெளியே 'விக்ரம்' படம் இந்த OTT -ல தான் ரிலீஸ்! முழு தகவல்

மணிரத்னம்:

இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பல திரைப்படங்களை தந்த மணிரத்னம் தனக்கென்று தனிப் பாணியில் திரைப்படங்களை இயக்கக் கூடியவர். திரைப்பட இயக்குனர்கள் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக அமைந்த முக்கியமான இயக்குனர் மணிரத்னம். அவருடைய திரைப்படங்கள் எப்போது வரும்.? எப்படி இருக்கும்.? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் இருப்பது போல, திரையுலகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கும் இருக்கும். திரையுலகில் பலரும் மணிரத்னம் திரைப்படங்களுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் பாகம் 1:

அந்த வகையில் தற்போது மணிரத்னம் இயக்கிக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாகும் இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மற்றும் பலர் நடிக்கின்றனர். இவர்களுடைய லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. இதேபோல் பொன்னியின் செல்வன் போஸ்டர் வெளியாகி இருந்தது.

Ponniyin selvan Karthi Look Drums Sivamani AR Rahman

ரீ ரெக்கார்டிங் பணியில் டிரம்ஸ் சிவமணி:

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரீ-ரெக்கார்டிங் பணிகளில் ஈடுபட்டிருந்த பிரபல டிரம்ஸ் கலைஞர் டிரம்ஸ் சிவமணி சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான ஏ.எம்.ஸ்டுடியோவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான ரீ-ரெக்கார்டிங்கை வாசித்தது குறித்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தியின் லுக் :

அதில், பொன்னின் செல்வன் திரைப்படத்தின் ரீ-ரெக்கார்டிங்கிற்காக டிரம்ஸ் வாசித்துக் கொண்டிருப்பதாகவும், தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும், உற்சாகம் தரும் பணியாக இருப்பதாகவும் இதை குறிப்பிட்ட டிரம்ஸ் சிவமணி, தமது  இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவில் பின்னணியில் ஒளிரும் திரையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தியின் லுக் எப்படி இருக்கும் என்பது பதிவாகி இருக்கிறது.‌

Ponniyin selvan Karthi Look Drums Sivamani AR Rahman

பிரபலமாகும் பொன்னியின் செல்வன் நாவல்:

பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகும் செய்தியை தொடர்ந்து பலரும் பொன்னியின் செல்வன் நாவலை ஆர்வமாக படிக்க தொடங்கி இருக்கின்றனர். புத்தகத் திருவிழாவில் கூட பொன்னியின் செல்வன் நாவல் அதிகம் விற்கப்பட்டு வருகிறது. குறைந்த பட்சம் தமிழில் அனைவரும் படிக்க விரும்பும் அடிப்படை நாவலாக பொன்னியின் செல்வன் உருவெடுத்திருக்கிறது என்றால் அதற்கு சமீபத்திய கூடுதல் காரணம் பொன்னியின் செல்வன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | ரசிகர்களின் அன்பு வென்றது.! விலகுவதாக அறிவிச்ச சீரியல் ஹீரோவின் நெகிழ்ச்சி முடிவு.!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin selvan Karthi Look Drums Sivamani AR Rahman

People looking for online information on ARRahman, Drums sivamani, Karthi look in PS1, Maniratnam, Ponniyin Selvan, PS1 will find this news story useful.