விக்னேஷ் சிவன் டைரக்ஷனில் நடித்த தமிழக முதல்வர்..? ஏ.ஆர்.ரஹ்மான் இசையா.?Exciting தகவல்.!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழின் முன்னணி இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன், சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவை இயக்குகிறார்.
![MK Stalin acted Chess Olympiad Vignesh Shivan AR Rahman MK Stalin acted Chess Olympiad Vignesh Shivan AR Rahman](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/mk-stalin-acted-chess-olympiad-vignesh-shivan-ar-rahman-photos-pictures-stills.jpeg)
Also Read | 'மெட்ராஸ்' ஹரி, 'டூலெட்' ஷீலா நடிக்கும் புதிய படம் - துவங்கி வைத்த பா.ரஞ்சித்.!
சென்னையை அடுத்த மாதம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் இதற்கான துவக்க விழா நடைபெற உள்ளது. பல்வேறு மண் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் உட்பட நடைபெறவுள்ள அனைத்து நிகழ்வுகளையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒருங்கிணைப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.
இந்நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக சென்னை நேப்பியர் பாலத்தில் வைத்து நடந்த படப்பிடிப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நடித்துள்ளதாகவும், அவரை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் நமக்கு பிரத்தியேகமாக கிடைத்துள்ளன.
மேலும் முன்னதாக இந்த நிகழ்வில், முன்னணி இசையமைப்பாளர்கள் இரண்டு பேரின் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இந்நிகழ்வில் இந்திய முன்னணி இசையமைப்பாளர், தமிழகத்தை சேர்ந்த இந்திய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
Also Read | முதல் தடவை 7 வயது பையனுக்கு அப்பாவாக விஷால் & அம்மாவாக சுனைனா.. BTS புகைப்படங்கள்.!