IRAVIN NIZHAL
www.garudabazaar.com

பர்தா போட்டு நிக்குற இந்த பொண்ணு யாரு.? - பிரபல சேனலின் புதிய சீரியல் firstlook போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கருப்பு நிற பர்தாவில் நிற்கும் இந்த பெண் யார்..? என்கிற கேள்வியுடன் ஜமீலாவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது கலர்ஸ் தமிழ் சேனல்.

Colors Tamil unveils first look of Jamelaa new serial

தமிழில் பொதுவாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றன. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் முக்கிய அம்சங்களாக விளங்கும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் வீட்டிலிருந்து குடும்பமாக அனைவரும் பார்க்கும் படியாக அமையக்கூடியவை. ஆட்டம், பாட்டம், சீரியல்கள் என சின்னத்திரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு வெகுஜன மத்தியில் எப்போதும் வரவேற்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அதிலும் சீரியல்கள் தற்போது புதிய புதிய யோசனைகளுடன் மாறுபட்ட கோணங்களில் வரத் தொடங்கி இருக்கின்றன. சீரியல்கள் புதிய பரிணாமங்களில் மக்களை கவரும்படியாக தற்காலத்தில் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது கலர்ஸ் தமிழில் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆம், பிரபல டிவி சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஜமீலா எனும் புத்தம் புதிய நெடுந்தொடரின் பிரம்மாண்டமான டீஸரை வெளியிட்டுள்ளது. ஒரு அமைதியான சூஃபி பின்னணி இசையுடன் கருப்பு நிற பார்த்தா அணிந்த பெண் ஒருவர் காட்சியளிக்கும் இந்த டீசரின் பின்னணி என்னவாக இருக்கும் என்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், கலர்ஸ் தமிழ் தமது இந்த புத்தம் புதிய தொடரின் தலைப்பை அறிவித்துள்ளது. 

ஜமீலாவின் இந்த புதிய கதை ஆகஸ்ட் 22 ஆம் தேதி இரவு 7:00 மணி முதல் டிவி சேனல் மூலமாக மக்களை வந்தடையவுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Colors Tamil unveils first look of Jamelaa new serial

People looking for online information on Colors Tamil, Colors Tamil Serial, Jamelaa, Today serial promo, Tv Serial will find this news story useful.