www.garudabazaar.com

AR ரஹ்மான் இசையில் விக்ரம் நடிச்ச கோப்ரா படத்தோட Songs.. ரெடி ஆன LIST..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் TRACK LIST வெளியாகி உள்ளன.

AR Rahman Vikram Cobra Movie Track List Out

Also Read | மம்மூட்டி - ரம்யா பாண்டியன் நடிக்கும் புதிய திரைப்படம்.. ரசிகர்களை கவரும் வேறலெவல் டீசர்!

விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். இன்று இப்படத்தின் இசை வெளியிடப்படுகிறது. இதனை முன்னிட்டு படக்குழு படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் TRACK LISTயை வெளியிட்டுள்ளனர்.

AR Rahman Vikram Cobra Movie Track List Out

முன்னதாக கோப்ரா படத்தில் இருந்து தும்பி துள்ளல், உயிர் உருகுதே மற்றும் அதீரா உள்ளிட்ட சிங்கிள் பாடல்களும் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த மூன்று பாடல்கள் போக  டிராக் லிஸ்ட்டில் மேலும் 2 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தராங்கினி எனும் ஒரு பாடலை சர்தாக் கல்யாணி பாடியுள்ளார். இந்த பாடலை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். மற்றொரு பாடலான "ஏலே இளஞ்சிங்கமே" பாடலை பா. விஜய் எழுத ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளார்.

கோப்ரா படம், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விறக்கப்பட்டுள்ளது. கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read | Ponnyin Selvan: பட்டையை கிளப்பும் டீசர்.. பிரம்மாண்ட PAN India படமாக ரிலீஸ் செய்யும் LYCA சுபாஸ்கரன்.!

தொடர்புடைய இணைப்புகள்

AR Rahman Vikram Cobra Movie Track List Out

People looking for online information on AR Rahman, Cobra Movie Updates, Vikram cobra movie, Vikram Cobra Movie Track List will find this news story useful.