IRAVIN NIZHAL
www.garudabazaar.com

விக்ரம் நடிக்கும் 'கோப்ரா'.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான சூப்பர் பாடல்கள்! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று வேளச்சேரியில் உள்ள மாலில் நடந்தது.

Vikram Starring Cobra Movie Songs AR Rahman Music Album Released

Also Read | பிரபல TOP போட்டோஃகிராபரின் LATEST TREND-ல் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே! இணையத்தை கலக்கும் செம PHOTOS

இந்த நிகழ்வில் நடிகர் விக்ரம், துருவ், ஶ்ரீ நிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், ஏ‌.ஆர். ரஹ்மான், தயாரிப்பாளர் லலித், இயக்குனர் அஜய் ஞானமுத்து, வினியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் MLA கலந்து கொண்டனர்.

முன்னதாக கோப்ரா படத்தில் இருந்து தும்பி துள்ளல், உயிர் உருகுதே மற்றும் அதீரா உள்ளிட்ட சிங்கிள் பாடல்கள் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த மூன்று பாடல்கள் போக   மேலும் 2 பாடல்கள் இன்று (12.07.2022) வெளியான ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. தரங்கினி எனும் ஒரு காதல் பாடலை சர்தாக் கல்யாணி பாடியுள்ளார். இந்த பாடலை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். மற்றொரு பாடலான "ஏலே இளஞ்சிங்கமே" எனும் தாலாட்டு பாடலை பா. விஜய் எழுத ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளார்.

Vikram Starring Cobra Movie Songs AR Rahman Music Album Released

விக்ரம் நடிப்பில் இந்த 'கோப்ரா' படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார்.  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். 

கோப்ரா படம், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விறக்கப்பட்டுள்ளது. கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Vikram Starring Cobra Movie Songs AR Rahman Music Album Released

இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read | வேட்டி கட்டி அசத்திய மாளவிகா மோகனன்.. வாழ்க்கை முழுவதும் இது தான்! வைரல் போஸ்ட்

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Starring Cobra Movie Songs AR Rahman Music Album Released

People looking for online information on AR Rahman, Cobra movie, Cobra Movie Songs, Vikram cobra movie will find this news story useful.