கொரோனா எதிரொலி ! Free-யா படம் பார்க்கலாமா ? அதுவும் ரெண்டு மாசத்துக்கா ? - செம Offer-ஆ இருக்கே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அத்தியாவசிய தேவை தவிர, முடிந்தவரை வெளியே வருவதை தவிர்க்குமாறு அரசு அறிவித்துள்ளது. மேலும் நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி, வருகிற 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி வரை வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இலவச சப்ஸ்கிரிப்ஷன் அறிவிப்பை ஈரோஸ் நவ் வழங்கியுள்ளது | Eros now Stre

மேலும் வீட்டில் இருந்து பணி செய்யும் படி, தங்களது பணியாளர்களை நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கும் நிலை உருவாகியுள்ளது. பாதுகாப்பு நலன் கருதி திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக Eros Now நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்ரை வெளியிட்டுள்ளது. அதில், ''தனிமைப்பட்டுள்ள மக்களுக்காக நாங்கள் இரண்டுமாத  கால இலவச சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகிறோம். STAYSAFRE என்ற கோடை பயன்படுத்தி ஏராளமான படங்கள், வெப் சீரஸ் மற்றும் இசையை கேட்டு மகிழுங்கள்.  பாதுகாப்பாக, அமைதியாக பொழுதுபோக்குடன் உங்கள் நேரத்தை செலவிடுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளது.

Entertainment sub editor