தெலுங்கு, தமிழ் பாடல்களுக்கு ஆட்டம் போட்ட வார்னர், full time ஆக்டிங்குக்கு ரெடியாகிறாரா?
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா பிரச்னையால் உலகம் முழுவதும் அனைத்து துறைகளும் முடங்கிக் கிடக்க, கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாமல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வீட்டில் குவாரண்டைன் ஆகி தங்களுடைய குவாலிட்டி டைமை குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணியின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இயங்கி வருபவர். தன்னுடைய மனைவி கேண்டைஸ் மற்றும் மகள் இண்டி ரே உடன் அவ்வப்போது டிக்டாக் வீடியோவை உருவாக்கி வெளியிட்டு வருகிறார். அதன் லின்க்கை தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாவில் பதிவிட்டு வெளியிடுவதை சமீப கால பழக்கமாக செய்துவருகிறார். அலா வைகுண்டபுரம்லோ படத்தில் அல்லு அர்ஜுன் ஸ்டைலிஷாக, ட்ரெண்டியாக ஆடி அசத்தி இருந்த ’’புட்ட பொம்மா’’ பாடலுக்கு அழகான ஸ்டெப் போட்டு ஆடி டிக்டாக்கில் வெளியிட்டு ரசிக்க வைத்தார் டேவிட் வார்னர்.
இந்நிலையில் டேவிட் வார்னரின் தற்போதைய தேர்வு தேவர் மகன் படத்தில் வரும் ’’இஞ்சி இடுப்பழகி’’ பாடல். இந்த பாடலின் மெட்டுக்கு மனைவி மகளுடன் மிக ஒய்யாரமாக ஆடி அசத்தி வீடியோவை வெளியிட்டுள்ளார் வார்னர். புட்ட பொம்மா டான்ஸில் ஹைலைட் கடைசியாக தன்னுடைய தொப்பியை ஸ்டைலாக விசிறி எறிவார் பாருங்கள். அதுதான் வார்னர் ஸ்டைல். இந்த வீடியோக்களை ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் அல்லது கோலிவுட் இயக்குனர்கள் பார்த்தால் அவரிடம் டேட்ஸ் கேட்பார்கள் என்பது நிச்சயம்.