மருத்துவமனையில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி..? இப்ப எப்படி இருக்கார்.? முழு விபரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான போண்டா மணி, கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான பாக்யராஜ்ஜின் 'பவுனு பவுனுதான்' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் கவனம்‌ ஈர்த்தார்.

comedy actor Bonda mani admitted in hospital health update

இதன் பின்னர், மெல்ல மெல்ல சிறிய கதாபாத்திரங்களாக நடித்து, பல்வேறு படங்களில் காமெடி நடிகராகவும் அசத்தி இருந்தார் போண்டா மணி.

அதிலும் குறிப்பாக, வைகைப் புயல் வடிவேலு, மறைந்த சின்னக் கலைவாணர் விவேக் ஆகியோருடன் இணைந்து போண்டா மணி நடித்த காமெடி காட்சிகள், இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில், திடீரென உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்,  போண்டா மணி அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கடந்த சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும் இந்த விஷயம், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.

உடல்நிலையில் முன்னேற்றம்

இதனைத் தொடர்ந்து, போண்டா மணிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததன் பெயரில், தற்போது அவரது உடல்நலம் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே போல ஜூன் 1-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து போண்டா மணி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன், திடீரென போண்டா மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவல், சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்ததையடுத்து, தற்போது அவர் குணமடைந்து வீடு திரும்ப உள்ளதால், அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

அதே போல, போண்டா மணி பூரண குணமடைந்து ஆரோக்கியத்துடன் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

comedy actor Bonda mani admitted in hospital health update

People looking for online information on Bonda Mani, Health Update will find this news story useful.