அடுத்த படத்தின் ஹீரோ 'சிம்பு'வா??... திரௌபதி இயக்குனர் அதிரடி...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே வெளியான படம் 'திரௌபதி'. ஒரு தரப்பு இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் மக்கள் பலரும் ஆதரவு தெரிவிக்க படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றி கண்டது.

Draupathi Director Shocking Reply On Simbu Casting In Next Film சிம்புவை வைத்து படம் இயக்க போகிறாரா திரௌபதி இயக்குனர்

இந்த படத்தை பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் ஜி இயக்கி இருந்தார். இதில் நடிகர் ரிச்சர்ட் ரிசி, சீலா ராஜ்குமார் மற்றும் கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி-யின் அடுத்த படம் ரிச்சர்ட் ரிசி காம்போ தான்.

மேலும் மோகன் ஜி தனது ட்விட்டர் தளத்தில் " 'திரௌபதி' என்ற கடவுள் பெயரைத் தலைப்பாக வைத்தது தான், பலருக்கும் என் மீது காழ்ப்புணர்ச்சி வரக் காரணம் என்று நினைக்கிறேன்... எனது அடுத்த படத்தின் தலைப்பும் ஒரு கடவுள் பெயர் தான்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் "நீங்களும் சிம்புவும் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும்" என்று கூற, அதற்கு பதிலளித்த அவர் "சிம்பு ரெடினா நானும் ரெடி. எனது அடுத்த படத்தை முடித்துவிட்டு சிம்புவுடன் பேசுவேன்" என்று கூறியுள்ளார்.

 

Entertainment sub editor