மிஷ்கினுடன் அடுத்தப்படம்..?! - என்ன நினைக்கிறார் சிம்பு.. படத்தின் தற்போதைய நிலை என்ன.?
முகப்பு > சினிமா செய்திகள்மிஷ்கினுடன் சிம்பு இணைவதாக எதிர்ப்பார்க்கப்படும் படம் குறித்து தகவல் தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் சிம்பு. இவர் தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இத்திரைப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இதனிடையே சிம்பு மாநாடு படத்தையடுத்து மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தை பிரபலமான தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபட்டது. இதையடுத்து நமது கோலிவுட் வட்டாரங்களிடம் விசாரித்த போது, 'மிஷ்கினின் ஸ்க்ரிப்ட் சிம்புவுக்கு பிடித்துள்ளதாகவும், அவருடன் சேர்ந்து பணியாற்ற சிம்பு ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்தின் தயாரிப்பாளர் குறித்து அதிகாரப்பூர்வ முடிவு வரும் எனவும், தற்போது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.