மங்காத்தா இன்டர்வல் ஷூட்டிங்.. அஜித் என்ன செய்தார்..?! - வெங்கட் பிரபு பகிர்ந்த மெமரீஸ்.
முகப்பு > சினிமா செய்திகள்மங்காத்தா ஷூட்டிங்கின் போது நடந்த சுவாரஸ்யமான விஷயத்தை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.

அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் மங்காத்தா. அஜித்தின் 50-வது படமான இதை வெங்கட் பிரபு இயக்கினார். இதில் திரிஷா, அர்ஜுன், வைபவ், ப்ரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு ஷூட்டிங்கின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். மங்காத்தா படத்தின் இன்டர்வல் காட்சியை ஷூட் செய்த அன்றுதான், அஜித் அனைவருக்கும் பிரியானி சமைத்து கொடுத்திருக்கிறார். இதை வெங்கட் பிரபு அப்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவை அவர் மீண்டும் தற்போது க்யோட் செய்து மங்காத்தா மெமரீஸ் என பதிவிட்டுள்ளார்.
Look what I found!! The tweet which i tweeted during #mankatha shoot times!!! #mankathamemories #thala #chessboardscene pic.twitter.com/xkUbArXyUP
— venkat prabhu (@vp_offl) March 30, 2020