''அவங்கள தூக்குல போடுங்க'' - 'திரௌபதி' பட இயக்குநர் கோபம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்.ஜி இயக்கத்தில் ரிஷி ரச்சர்டு ஹீரோவாக நடித்து வெளியான 'திரௌபதி' படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது. இதனையடுத்து அவர் ரிஷி ரச்சர்டு ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தித்தாளில் இடம் பெற்ற செய்தி ஒன்றை புகைப்படமாக வெளியிட்டுள்ளார். அதில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்படும் பெண்களை ஏமாற்றிய இளைஞர் குறித்த செய்தி வெளியாகியிருந்தது.

இதுகுறித்து கோபமாக கருத்து தெரிவித்துள்ள அவர், ''பெண்களே.. இவ்வளவு பலவீனமானவர்களா நீங்கள்..  இந்த மாதிரி வேடம் போடும் நாடக காதல் மன்னர்களை சட்டப்படி தூக்கில் இடுங்கள்..'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor