எங்கள் அடுத்த படத்தின் டைட்டிலை கூட சொல்ல முடியல - திரௌபதி இயக்குநர் மோகன்.ஜி வேதனை.
முகப்பு > சினிமா செய்திகள்திரௌபதி படத்தின் இயக்குநர் மோகன்.ஜி ட்விட்டரில் தனது அடுத்தப்படத்தின் டைட்டில் குறித்து தெரிவித்துள்ளார்.
![மோகன்.ஜி மற்றும் ரிச்சர்ட்டின் அடுத்தப்படம் | draupathi director opens on his next film titile release with richard rishi மோகன்.ஜி மற்றும் ரிச்சர்ட்டின் அடுத்தப்படம் | draupathi director opens on his next film titile release with richard rishi](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/draupathi-director-opens-on-his-next-film-titile-release-with-richard-rishi-news-1.jpg)
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன்.ஜி. இதையடுத்து இவர் திரௌபதி படத்தை இயக்கினார். ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார், லேனா, கருணாஸ் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்தனர். அண்மையில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.
இந்நிலையில் மீண்டும் ரிச்சர்ட் ரிஷியுடன் இணைவதாக மோகன்.ஜி அறிவித்திருந்தார். தற்போது அத்திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு குறித்து அவர் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''எங்களின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பை சித்திரை முதல் நாளில் வெளியிடும் ஆவலில் இருந்தேன்.. ஆனால் தற்போதைய சூழல் சரியில்லாத காரணத்தால் அறிவிப்பை சில காலம் தள்ளி வைத்து உள்ளேன்.. அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கவும்.. நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும்.'' என அவர் தெரிவித்துள்ளார்.
எங்களின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பை சித்திரை முதல் நாளில் வெளியிடும் ஆவலில் இருந்தேன்.. ஆனால் தற்போதைய சூழல் சரியில்லாத காரணத்தால் அறிவிப்பை சில காலம் தள்ளி வைத்து உள்ளேன்.. அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கவும்.. நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும்.. pic.twitter.com/ieJeD3SbjN
— Mohan G 🔥😎 (@mohandreamer) April 12, 2020