'திரௌபதி' இயக்குனரின் அடுத்த படம்....'ஹீரோ' யாருனு தெரிஞ்சா 'ஷாக்' ஆயிடுவீங்க..!!
முகப்பு > சினிமா செய்திகள்கடந்த மாதம் இறுதியில் பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே வெளியான படம் 'திரௌபதி'. ஒரு தரப்பு இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் மக்கள் பலரும் ஆதரவு தெரிவிக்க படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றி கண்டது.

இந்த படத்தை பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் ஜி இயக்கி இருந்தார். இதில் நடிகர் ரிச்சர்ட் ரிசி, சீலா ராஜ்குமார் மற்றும் கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி-யின் அடுத்த படம் பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது மோகன் ஜி, ரிச்சர்ட் ரிசி காம்போ தான் அடுத்த படத்திலும் இணைகிறார்களாம். இந்த செய்தியை படத்தின் இசையமைப்பாளர் ஜூபின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் மோகன் ஜி தனது ட்விட்டர் தளத்தில் " 'திரௌபதி' என்ற கடவுள் பெயரைத் தலைப்பாக வைத்தது தான், பலருக்கும் என் மீது காழ்ப்புணர்ச்சி வரக் காரணம் என்று நினைக்கிறேன்... எனது அடுத்த படத்தின் தலைப்பும் ஒரு கடவுள் பெயர் தான்" என்று அதிரடியாகக் கருத்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கள் கூட்டணியில் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்... @mohandreamer @richardrishi pic.twitter.com/wWGYZHOR2i
— Jubin (@jubinmusic) March 10, 2020