வங்கிக் கடன் பாக்கி காராணமாக நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் சொந்துக்கள் ஏலத்தில் விடப்படுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செய்தித்தாளில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
![Actor, DMDK President Vijayakanth's properties comes for auction Actor, DMDK President Vijayakanth's properties comes for auction](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/actor-dmdk-president-vijayakanths-properties-comes-for-auction-photos-pictures-stills.jpg)
விஜயகாந்திற்கு சொந்தமான வீடு, நிலம், வணிக வளாகம், கல்லூரி ஆகியவை ஏலத்தில் விடப்படுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நாளிதழில் வெளியிட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீடு, மதுரந்தகம் அருகே மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும் ஏலத்திற்கு விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விளம்பரத்தில், விஜயகாந்திடம் இருந்து பெறவேண்டிய கடன்பாக்கி தொகை ரூ.5,52,73,825 மற்றும் வட்டி உள்ளிட்ட இதர செலவுகளை வசூலிப்பதற்காக அவரது அசையா சொத்துக்களை ‘உள்ள இடத்தில் உள்ளவாறு’, ‘உள்ளது உள்ளவாறு’ மற்றும் ‘எந்த நிலையில் உள்ளதோ அத்ந்த நிலையிலேயே’ என்ற அடைப்படையில் வரும் ஜூலை.26ம் தேதி விற்பனை செய்யப்படும் என பொதுமக்களுக்கும், கடந்தாரர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.