ஒரே பாடலில் இத்தனை இயக்குநர்களா..? வெற்றிமாறன் வெளியிட்ட பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சுப்பிரமணிய சிவா இயக்கியுள்ள வெள்ளையானை படத்தில் இருந்து ஆற தேடும் பாடலை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.

vetrimaran releases samuthirakani starring vellaiyaanai song

திருடா திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுப்பிரமணிய சிவா. இதையடுத்து பொறி, யோகி, சீடன் ஆகிய படங்களை அவர் இயக்கியுள்ளார்.

மேலும் தனுஷின் வேலை இல்லா பட்டாதாரி படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகளிலும் அவர் பணியாற்றியுள்ளார். இத்துடன் தனுஷ் நடித்த வடச்சென்னை, அசுரன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் தோன்றினார்.

இந்த நிலையில் சுப்பிரமணிய சிவா தற்போது இயக்கியுள்ள திரைப்படம் வெள்ளையானை. சமுத்திரகனி, யோகிபாபு, ஆத்மியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தில் இருந்து ஆற தேடும் எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இப்பாடலை வெளியிட்டுள்ளார். இயக்குநர் ராஜு முருகன் இப்பாடலை எழுதியிருக்கிறார். கிராமத்து மனிதர்களின் வலியை தன் குரலால் இப்பாடலின் மூலம் நமக்குள் கடத்துகிறார் சந்தோஷ் நாராயணன்.

 

Entertainment sub editor