நடிகர் விஜயகாந்த் மற்றும் அவரது மகன் சண்முக பாண்டியனுடன் பிரபல தயாரிப்பாளர் சந்திப்பு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 29, 2019 07:30 PM
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ், கென், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது உடன் அவரது மகன் சண்முகபாண்டியன் இருந்தார்.
மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படங்களை நடிகர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Tags : Vijayakanth, Shanmuga Pandian, Kalaipuli S Thanu