'அந்த கண்ண பார்த்தாக்கா' - இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு Favourite-ஆம் , அப்போ Fav. Actor யார் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனிருத் இசையில் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் பாடியுள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்ததிருந்தது.

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் அந்த கண்ண பார்த்தாக்கா தனது விருப்பமான பாடல் என வெங்கட் பி

குறிப்பாக யுவன் பாடிய 'அந்த கண்ணப் பார்த்தாக்கா' பாடல்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இந்த பாடல் மூலம் நீண்ட வருடங்களுக்கு பிறகு யுவனும் தளபதி விஜய்யும் இணைந்திருப்பது இருதரப்பு ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கும்.

இந்நிலையில்  இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது விருப்பமானவைகள் குறித்து கருத்து தெரிவித்தார். அதில், தற்போதைய விருப்பமான பாடல் அந்த கண்ண பார்த்தாக்க என்றும் எப்பொழுதும் விருப்பமான பாடலாக மைக்கேல் ஜாக்சனின் மேன் இன் த மிரர் பாடல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தனக்கு பிடித்த நிறம் - கருப்பு, விருப்பமான நடிகர் - ராபின் வில்லியம்ஸ், விருப்பமான ட்ரிங்க் - அக்ரஹாரத்து ஃபில்டர் காபி பகல் பொழுதிலும், மாலையில் hibiki  என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விருப்பமானவைகள் குறித்து யுவன் ஷங்கர் ராஜா , சூர்யா, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோரை குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor