ஒரு மெல்லிசான கோடு.. விக்டருக்கு நம்ம தல சொன்னதுதான்.. இப்போ மக்களுக்கு போலீஸ் சொல்றதும்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

என்னை அறிந்தால் படத்தின் காட்சியை வைத்து உருவான மீம்ஸ் தற்போது வைரல் ஆகி வருகிறது.

அஜித்தின் என்னை அறிந்தால் கொரோனா மீம்ஸ் | ajith arun vijay's ennai arindhal meme for corona goes viral.

உலகம் முழுவதும் தற்போது கரோனா வைரஸ் குறித்த அச்சம் பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவிலும் அது எதிரொலித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு ஊர்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் யாரையும் அவசியமில்லாமல் வெளியில் வர வேண்டாம் என போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது இணையத்தில் இதுகுறித்த மீம்ஸ் ட்ரென்ட் அடித்து வருகிறது. என்னை அறிந்தால் படத்தின் ஒரு காட்சியில், அஜித் அருண் விஜய்யிடம் ஒரு மெல்லிசான கோடு, அந்த கோட்டை தாண்டி வர கூடாது என சொல்வதை போலீஸார் மக்களுக்கு சொல்வது போல உருவாக்கப்பட்டுள்ள மீம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் கூட, இது போன்ற மீம்ஸ் மக்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor